“மெட்ரோ திட்டம் தேவையில்லாதது! சாலையை ஒழுங்கா போட்டு, பேருந்த ஒழுங்கா ஓட்டுங்க”- சீமான்

 
seeman

காவிரியில் உரிய நதி நீரை பெறுவதில் சிரமம் உள்ளது. தமிழகத்தில் இருந்து வளங்களை பெற்றுக்கொண்டு மேஹேதாட்டுவில் அணை கட்டுவதை எப்படி ஏற்க முடியும் என்று புதுச்சேரியில் சீமான் பேட்டி அளித்தார். 

seeman

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், புதுச்சேரியில் செய்தியாளர்களிடம்  பேசுகையில்,  திமுக, அதிமுக கட்சியினர் வீடு கொடுப்பதாக தெரிவித்தனர். நான் செய்ய நினைப்பதைதான் கேட்கவேண்டும். விஜயிடம் என்னை பற்றி கேட்பார்கள். பிப்ரவரி 7ம் தேதி புதுச்சேரி, தமிழக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். ஆணும் பெண்ணும் சமம். அதுபோல் வேட்பாளர்கள் உண்டு. மாஹே, ஏனாமில் போட்டியிட மாட்டோம். மாஹே, ஏனாம் வேண்டாம். மாநில உரிமை வேண்டும். மது விற்பனை வருவாயை அங்கீகரித்த மாநிலமாக புதுச்சேரி உள்ளது. ஏன் தமிழகமே மது வருவாயை ஆட்சி நடத்துகிறது. மது விஷம். எந்த வடிவத்திலும் விஷத்தை விற்று நலத்திட்டம் செய்வது எந்த மாதிரி செயல்- அதை எப்படி ஏற்பது- பேசி பயனில்லை என்றார்.

மேலும் பேசிய அவர், நாங்கள் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் மாற்று வருவாய் ஏற்படுத்தி மதுக்கடைகளை மூடுவோம். புதுச்சேரி சுற்றுலா தலமாக இருப்பதால் மதுக்கடைகளை இங்கு மொத்தமாக மூட முடியாது. காவிரியில் உரிய நதி நீரை பெறுவதில் சிரமம் உள்ளது. தமிழகத்தில் இருந்து வளங்களை பெற்றுக்கொண்டு மேகதாதுவில் அணை கட்டுவதை எப்படி ஏற்க முடியும். அவரவர் நீர் வளம் அவருக்கு என கேரளம், கர்நாடகம் நிற்பதுடன் மத்திய ஆட்சியாளர்கள் தருகின்றனர். காங்கிரஸ் பாஜக தேசிய கட்சிகள் இப்பிரச்சினையில் மாநில கட்சியாகவிடுகின்றன. தமிழகத்தில் இக்கட்சிகள் இதை பேசுவதில்லை. வாக்களிப்பதால் இந்த உரிமையை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.  

seeman

கர்நாடகத்தில் காங்கிரஸ் வெல்ல வாக்குகளை கேட்ட ஸ்டாலினிடம்தான் கேட்கவேண்டும்.பீகாரில் எதிரான வாக்குகளை எடுத்து விட்டு, பல நலத்திட்டங்களை அறிவித்து வாக்குகளை ரூ. 10 ஆயிரம் அறிவித்து வென்றுள்ளனர். மெட்ரோ திட்டம் தேவையில்லாதது. சாலையை சரியாக போடவில்லை. பஸ்கள் சரியாக இயங்கவில்லை. இதை ஒழுங்காக செய்யலாம். இதை விட்டு வாகன நெரிசலை சாலையில் ஏற்படுத்தி விட்டனர். எல்லா வீடுகளிலும் வாகனங்கள், அரசு பஸ்கள் இருக்கிறது. வயிறு நிறைய பசி வைத்து விமானத்தில் பறப்பதா வளர்ச்சி. அதற்கு ரூ. 72 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதி இல்லாமல் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இருப்பதை சரி செய்யுங்கள். நான்வந்தால் இத்திட்டத்துக்கு அனுமதியில்லை. சென்னை விமான நிலையத்தில் பறக்க விமானம் இல்லாதபோது புதிய விமான நிலையம் ஏன்- அதேபோல் துறைமுகங்களில் முழுமையாக பணி நடக்காதபோது மீண்டும் துறைமுகம் கட்டுவது ஏன்- இருப்பதில் வேலை முழுமையாக இல்லாதபோது புதியவை ஏதற்கு. புதிய விமானநிலையத்தில் தனியார் விமானங்கள்தான் இயங்க போகிறது. மெட்ரோ ரயில் திட்டம் உலக வங்கி உடையது. இது வளர்ச்சி அல்ல. எஸ்ஐஆர் செயல்படுத்துவது தமிழக அரசுதான். அதற்கான பணியாளர்களை நியமித்தது திமுகதான். திமுக கட்சியினரும் உடன் சென்றால் அங்கு எங்கள் படம் இருந்தால் அதை எடுத்து விடுவார்களா இல்லையா? பத்து நாட்களில் எஸ்ஐஆர் படிவம் தரமுடிந்தால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடியுமா? இல்லையா? என்று கூறினார்.