எண்ணூர் கொற்றலை ஆற்றில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதை நிறுத்துக- சீமான்

 
seeman

எண்ணூர் கொற்றலை ஆற்றில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதை நிறுத்தி  மீனவர்களை பாதிக்காமல் மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சீமான் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Sedition case against Seeman - The Hindu

சென்னை எண்ணூர் கொற்றலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் தமிழ்நாடு மின் தொடரப்பு கழகம் சட்ட விதிகளை மீறி ஆக்கிரமித்து கட்டி வரும் உயர்மின் கோபுரங்களின் கட்டுமானத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எண்ணூர் மாநகராட்சி மண்டல அலுவலகம் எதிரே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றேன் கண்டன முழக்கங்களை எழுப்பினார். 

ஆர்ப்பாட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “எண்ணூர் முகத்துவாரம் வழியாக கொற்றலை ஆற்றின் வழியாக பூண்டி புழல் ஏரிகளின் உபரி நீர் பழவேற்காடு ஏரி தண்ணீர் கடலுக்குள் செல்கிறது. மழைக்காலங்களில் ஆற்றின் வழியாகத்தான் மழை நீர் கடலில் கலக்கிறது. கடந்த  2015 ஏற்பட்ட பெருவெள்ளத்தை சந்தித்த பொழுது கொற்றலை  ஆறு தான் சென்னை மக்களை காப்பாற்றியது. ஆனால் இப்பொழுது ஆற்றை குறுக்க மறிக்கப்படுகிறது இதனால் மீண்டும் ஒரு பேரிடரை சந்தித்தால் சென்னை மக்கள் பெரிய பாதிப்புக்கு ஆளாக நேரிடும், கொற்றலை ஆற்றில் உயர் மின் கோபுரம் அமைப்பதற்காக ஆற்றை மறித்து கான்கிரீட் அமைக்கப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. பசுமை தீர்ப்பாயம் கடலோர ஒழுங்கு மண்டலம் சீரமைப்பு அனைவரும் கொடுத்த அனுமதியும் மீறி ஆற்றை ஆக்கிரமித்து கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன

காற்றை நிலத்தை நீரை நாசமாக்குற நஞ்சாகிற மாசப்படுத்துகிற ஆலைகளாக செயல்பட்டு வருகின்றன. மனிதர்களின் உணவு வகையில் 30% மீன்கள் சரி செய்கிறது ஆனால் ஆனால் தற்பொழுதுமே மீன் இனப்பெருக்கமே முற்றிலும் அழிந்துவிட்டது. நண்டு, இறால், மீன் உள்ளிட்ட  கடல் வாழ் உயிரினங்கள் அனைத்தும் அழிந்துவிட்டன. முகத்துவாரம் பகுதியில் இனப்பெருக்கம்  இல்லாமல் வெந்நீர் எண்ணெய் கழிவுகள் இருப்பதினால் மீன் இனமே அழிந்து விட்டன. உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்ய முடியாமல் மலட்டு தன்மை அடைந்து விட்டன. மின் கோபுரங்களை அகற்றுவதற்கு கோரிக்கை வைப்போம் போராடுவோம், ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள் அதிகாரம் மாறும்பொழுது மண்ணை மக்க நேசிக்கின்ற அதிகாரம் வரும்போது ஒரே நாளில் இடித்து தரைமட்டம் ஆக்குவோம்” என்று கூறினார்