"பசியோடு இருப்பவன் பிரியாணி வேண்டாம் என்று சொல்வானா?" - அதிமுக, திமுகவுடன் கைககோர்க்க சீமான் தயார்
அம்பாசமுத்திரத்தில் நான் போட்டி என தவெகவினா் தான் கிளப்பி விட்டுள்ளனா் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

பசும்பொன்னில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,"அம்பாசமுத்திரம் தொகுதியில் நிற்பது குறித்து தற்போது வரை நானே எந்த முடிவும் எடுக்கவில்லை. அம்பாசமுத்திரத்தில் நான் போட்டி என தவெகவினா் தான் கிளப்பி விட்டுள்ளனா். நான் பொதுவேட்பாளர் என கிளப்பிவிடுவது தவெகவினர். சீமானின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என பெரும்பான்மையானோர் நினைக்கின்றனர். நான் சட்டமன்றம் செல்ல பலர் விரும்புகின்றனர் அம்பாசமுத்திரத்தில் போட்டி என்பதில் உறுதியாக உள்ளேன். தேர்தலில் போட்டியில்லை என திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் முடிவெடுக்கவில்லை. திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தால் வேண்டாம் என எப்படி கூறுவேன்? திமுக, அதிமுக பெருந்தன்மையுடன் என்னை ஆதரித்தால் ஏற்பேன். அண்ணனா, தம்பியா? நேருக்கு நேர் மோதிப் பார்ப்போம்!" என்றார்.

