“தாயக் கட்டை, பல்லாங்குழி, சீட்டு ஆடுவது தான் 100 நாள் வேலையில் நடக்கிறது”- சீமான்
தாயக் கட்டை, பல்லாங்குழி, சீட்டு ஆடுவது தான் 100 நாள் வேலையில் நடக்கிறது- சீமான்தாயக் கட்டை, பல்லாங்குழி, சீட்டு ஆடுவது தான் 100 நாள் வேலையில் நடக்கிறது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை முதலில் பயன்படுத்தியது நாம் தான். கொடி கூட வேற வண்ணத்துல அமைக்க முடியாம நம்மளோட சிவப்பு, மஞ்சள் நிறத்தைதான் விஜய் பயன்படுத்தியுள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போன வருடம் எங்க போனீங்க..? முருகன் மேல இப்ப மட்டும் ஏன் பாசம் வருது? தேர்தலுக்கு முன்னால் இதை கொண்டு வருவது ஏன்..? தீ குச்சியால் விளக்கும் ஏற்றலாம்..வீட்டையும் எரிக்கலாம்.. நீங்கள் வீட்டை கொழுத்த வருகிறீர்கள்... விளக்கை ஏற்ற வரவில்லை. 2 தரப்பையும் கூப்பிட்டு பேசியிருந்தா 1\2 மணி நேரத்தில் இந்த பிரச்சனையை தீர்த்திருக்கலாம்..
100 நாள் வேலைத்திட்டதையே நாங்கள் ஏற்கவில்லை. தாயக் கட்டை, பல்லாங்குழி, சீட்டு ஆடுவது, கிளித்தட்டு ஆடுவது தான் 100 நாள் வேலையில் நடைபெறுகிறது. தூர்வாரிய குளங்கள் எத்தனை? போடப்பட்ட சாலைகள் எவ்வளவு? உழைக்காமல் இருப்பதும் ஒரு வகை திருட்டு என சொன்ன காந்தியின் பெயரை அவமதிப்பதாக தான் இத்திட்டம் உள்ளது. 100 % வாக்காளர்களில் 65% பேர் தான் வாக்கு செலுத்த வராங்க... இருக்கிற வாக்கையும் தூக்கிட்டா என்ன செய்வது? இன்று ஆட்சியாளர்கள் அவர்களுக்கான வாக்காளர்களை தேர்வு செய்கிறார்கள். பொங்கல் பரிசு தொகை உயர்வு நம்முடைய ஓட்டிற்கு மதிப்பு கூடுகிறது என அர்த்தம். ஜனநாயகத்தில் வாக்குரிமை தான் கடைசி வாய்ப்பு. அதற்கும் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்” என்றார்.


