அதிமுக, காங்கிரஸிடம் விஜய் பெட்டி வாங்கினாரா?- சீமான்

 
தவெக மாநாட்டிற்கு குவியும் தொண்டர்கள்.. “நாட்டில் பலர் வேலை வெட்டி இல்லாமல் இருப்பதை காட்டுகிறது” - விஜய்யை சீண்டிய சீமான்..!! தவெக மாநாட்டிற்கு குவியும் தொண்டர்கள்.. “நாட்டில் பலர் வேலை வெட்டி இல்லாமல் இருப்பதை காட்டுகிறது” - விஜய்யை சீண்டிய சீமான்..!!

தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு மேலாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு அரசியல் சித்தாந்தத்தை மற்றொரு மாற்று சித்தாந்தததை  கொண்டு தான் வீழ்த்த முடியுமே தவிர சினிமாவால் வீழ்த்திவிட முடியாது, கூடும் கூட்டத்தை பார்க்காதீர்கள் கட்சியின் கொள்கையை பாருங்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சீமான்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் (TNPSC) தேர்வாணையத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில்  பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கண்டன பொதுகூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னதாக செய்தியாளர்களிடம் பேசும் போது, “தமிழ்நாட்டில் சுமார் கால் நூற்றாண்டுகளாக தமிழ்நாடு அரசுதேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்பட்டுவரும் பணியிடங்களில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக ஏராளமான இளைஞர்களும் மாணவிகளும் கோரி வந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவாக   இந்த பொதுக்கூட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

த வெ க - விஜய்யை பார்க்க கூடும் கூட்டம், சினிமாவில் முதல் காட்சி காண கூடும் கூட்டம் போன்றது. அந்தப்படம் நல்லா இருந்தால் அடுத்தடுத்த காட்சிக்கு  கூட்டம் சேரும். விஜய்  மக்களிடம் என்ன சித்தாந்தத்தை, கொள்கையை முன் வைக்கிறார் என்று பாருங்கள். அங்கு கூடுவது அவரை பார்க்க கூடும் கூட்டம், தான், ஆனால் சீமானுக்கு வரும் கூட்டம் எனது கருத்தை கேட்க கூடும் கூட்டம். வலை தளங்களில் நான் கூறும் சித்தாந்தங்களை 2 கோடி பேர் தேடி தேடி பார்க்கின்றனர். தம்பி விஜயை பார்த்து விட்டு திரும்பி விடும் கூட்டம் அது. மேலும் நயன்தாரா மற்றும் அண்ணன் வடிவேலுக்கு கூட கூட்டம் சேர்ந்ததை பார்க்கலையா? தமிழ்நாட்டில் 50 - ஆண்டுகளுக்கு மேலாக கடைபிடிக்கப்பட்டு  வரும் ஒரு அரசியல் சித்தாந்தத்தை மற்றொரு மாற்று சித்தாந்தத்தால் மட்டுமே வீழ்த்த முடியுமே தவிர சினிமாவால் வீழ்த்திவிட முடியாது. கூடும் கூட்டத்தை பார்க்காதீர்கள், அந்த கட்சியின் கொள்கையை பாருங்கள்.

இன்று இங்கு நடப்பதே திமுக அரசுக்கு எதிரான பொதுக்கூட்டம் தானே. பாஜகவை கொள்கை எதிரி என்று பேசும் விஜய் அப்போ காங்கிரசிடம் பெட்டி வாங்கினாரா?
திமுக- வை அரசியல் எதிரி என்று கூறும் விஜய் அதிமுகவிடம் பெட்டி வாங்கினாரா ? இதுபோன்ற கேள்விகளை கேட்காமல் என்னை ஸ்டாலினிடம் பெட்டி வாங்கிட்டார் என்பது போல் விமர்சிப்பது ஏன்? திமுகவை சீமான் எதிர்த்தால் ஆர்.எஸ்.எஸ். கைகூலி, பாஜகவை எதிர்த்தால் கிறுஸ்தவ கைகூலி என்றும் இவர்களிடம் சீமான்
பெட்டி வாங்கி விட்டான் என்பீர்கள். ஆனால் ஒரு தீப்பெட்டி கூட கிடைக்காது” என்றார்.