"ஜெயலலிதா எடுத்தது வரலாற்றில் மிகச்சரியான முடிவு; கருணாநிதி செய்ததுதான் தவறு"- சீமான்

 
சீமான் சீமான்

ஜெயலலிதா எடுத்தது வரலாற்றில் மிகச்சரியான முடிவு, கருணாநிதி செய்தது வரலாற்றுப் பெரும் பிழை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 


திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “ஜெயலலிதா பாஜக ஆட்சியை கலைத்தது வரலாற்றில் அவர் எடுத்த சரியான முடிவு. அதன்பின் கருணாநிதி, பாஜகவோடு கூட்டணி வைத்து ஆட்சியை நிலைபெறச் செய்ததது, அவர் செய்த வரலாற்று பெரும் பிழை. ஓபிஎஸ் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டார். ஆனால் கொடுக்கவில்லை. நீண்டகாலமாக அவர் அரசியலில் இருக்கிறார். 2 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக கூட இருந்திருக்கிறார். அவருக்கு தன்மானம் என்று ஒன்று இருக்கிறது. அதனால் பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்திருபார். அனைத்து சாதிக் கட்சிகளையும் மதக் கட்சி வழிநடத்துகிறது. என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள பாமக ஒரு சாதிக்கட்சி, என் சாதி பெருசுன்னு சாதி பெருமை, சாதி ஆணவத்தை வைத்து கொலை செய்பவர்களுக்கு தனி சட்டம் இயற்றி அவர்களை ஒழிக்கவேண்டும்.” என்றார்.