“காமராஜரை எருமை மாடு எனக் கூறியவர் கருணாநிதி”- சீமான்

 
பிரபாகரன் படம் வெட்டி ஒட்டப்பட்டதா? திராவிட நாய்கள்.. சீமான் பரபரப்பு பேட்டி பிரபாகரன் படம் வெட்டி ஒட்டப்பட்டதா? திராவிட நாய்கள்.. சீமான் பரபரப்பு பேட்டி

காமராஜர் தற்போது உயிரோடு இல்லை என்பதால் எதை, எதையோ பேசிக் கொண்டிருக்கிறார் என திருச்சி சிவாவுக்கு சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.

seeman

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என திமுக கூட்டணியில் கேட்கிறார்கள். ஆனால் திமுகவின் நிலைப்பாடு மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் குடும்ப ஆட்சி என்பதுதான். 2026 தேர்தலில் திமுக கூட்டணி , அதிமுக கூட்டணி , தம்பி விஜய் என எல்லாரும் ஒரு பக்கமும் நான் நாம் மட்டும் இன்னொரு பக்கம் என இருமுனை போட்டி. திருமாவளவன் சொல்வது போல் கருணாநிதி அவர்களின் ஆட்சியை விட ஸ்டாலின் அவர்களின் ஆட்சி dangerous தான். 

உங்களுடன் ஸ்டாலின் வீடுதேடி ஸ்டாலின்- ஸ்டாலின் வீடு தேடி வருகிறார், மக்கள் ரோடு தேடி வருகிறார்கள் போராடுவதற்கு! திமுக, அரசு இயந்திரத்தை கட்சிப் பணிகளுக்காக, வாக்கு கேட்கப் பயன்படுத்துகிறது. தமிழ்நாடு தேர்வு ஆணையத்தின் வேலை வாய்ப்பு 3500 மட்டும், தேர்வு எழுதியவர்கள் 13 லட்சம். இதில் எத்தனை தமிழர்கள் எத்தனை மாற்று இனத்தவர்கள் என்று தெரியவில்லை. அதிமுக கொண்டு வந்தது எந்த மாநிலத்தை சேர்ந்தவரும் தமிழ்நாடு தேர்வு ஆணையத்தின் மூலம் தேர்வு எழுதலாம். ஆட்சிக்கு வந்தால் இதை நீக்குவோம் என்றார்கள் இதுவரை நீக்கவில்லை.

seeman

வீடு வீடாக ஸ்டிக்கர் ஒட்டி ஒரு கோடி உறுப்பினர்களை சேர்த்ததாக கூறும் திமுக - அந்த ஒரு கோடி பேர் வாக்கு செலுத்தினாலே திமுக வென்று விடுமே... பிறகு ஏன் காசு கொடுக்கிறார்கள்? உங்க கிட்ட இருந்துதான் இந்த மண்ணையையும் மானத்தையும் முதலில் காப்பாற்ற வேண்டும். காமராஜரை எருமை மாடு எனக் கூறியவர் கருணாநிதி, காமராஜர் கருவாட்டுக்காரியின் மகன் என விமர்சித்தவர் கருணாநிதி. ஆனால் காமராஜர் தற்போது உயிரோடு இல்லை என்பதால் எதை, எதையோ பேசிக் கொண்டிருக்கிறார்” என்றார்.