"நான் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை"- சீமான்
Apr 6, 2025, 11:41 IST1743919901209

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சந்தித்ததாக தகவல் வெளியான நிலையில் சந்திக்கவில்லை என சீமான் கூறியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியானது. சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.
தமிழக அரசியல் நிலவரம் குறித்து சீமான், நிர்மலா சீதாராமனிடம் பேசியதாக கூறப்பட்ட நிலையில், நான் நிர்மலா சீதாராமனை சந்திக்கவேவில்லை என சீமான் பேட்டியளித்துள்ளார்.