“ஒரு நாள் தொப்பி போட்டு வேடம் போடுபவன் நான் அல்ல” - விஜய்யின் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி குறித்து சீமான் பேட்டி

ஒரு நாள் தொப்பி போட்டு வேடம் போடுபவன் நான் அல்ல என விஜய்-யின் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "புதிய கல்வி கொள்கையில் தெளிவான முடிவு எடுக்க வேண்டும். இதை தமிழக அரசு நேரடியாக செயல்படுத்த பார்ப்பதாக கல்வியாளர் ஜவகர் உள்ளிட்டோர் தெரிவித்து இருக்கின்றனர். இது நம் குழந்தைகளுக்கு எழுதி வைக்கப்பட்ட மரணசாசனம், மாணவர்கள் விரும்பிய கல்வியை படிக்க பெரிய தடையாக இருக்கின்றது, கல்வி என்பது சுமையாக இருக்க கூடாது. மருத்துவம் உட்பட எல்லாவற்றிக்கும் தேர்வு இருக்கின்றது. மதிப்பெண்ணை வைத்து மனித அறிவை மதிப்பிடுவது சரியானதா? நாட்டை நிர்வகிக்கும் தலைவர்களுக்கு என்ன தேர்வு இருக்கின்றது? எந்த தகுதியும் இல்லாதவர் இந்த நாட்டை ஆள முடியும், மற்றவத்திற்கு தேர்வு எழுத வேண்டும் என்பது சரியானது கிடையாது.
தென்கொரியாவில் 8 வயதில் படிப்பை தொடங்குகின்றனர். ஆனால் இங்கு 8 வயதில் பொது தேர்வு எழுத சொல்கின்றீர்கள் இப்போது நீட் தேர்வு எழுதிய தங்கை இறத்து விட்டார். கல்வியை வியாபாரம் ஆக்கிட்டு சமகல்வி என சொல்வதே மோசடி. பணம் இருந்தால் நல்ல கல்வி கற்கலாம், பணம் இல்லை என்றால் கல்வி இல்லை என தெரிவிரித்த அவர், எத்தனை பேர் கல்வியை தொடர முடியாமல் இடைநிறுத்தம் செய்து போகின்றனர்... நகர் புறங்களில் இருக்கும் வசதிகள் கிராம்புற பள்ளிகளில் இருக்கின்றதா? சம கல்வி என்பது இருக்கின்றதா ? வரி ஒன்றாக இருக்கின்றது, வாழ்க்கை தரம் ஒன்றாக இருக்கின்றதா? ஒரு நாள் தொப்பி போட்டு வேடம் போடும் இஸ்லாமியர் நான் இல்லை. தம்பி விஜய் இதை விரும்புகின்றார், விஜய் நோன்பு கஞ்சி கொடுத்ததால் விலைவாசி ஏறியது, மின்தடை ஏற்பட்டது என்றால் விவாதிக்கலாம். அதனால் நாட்டுக்கும் மக்களுக்கும் அதனால் என்ன பாதிப்பு? அம்மா என்று யாரும் முதலில் ஜெயலலிதாவை சொல்ல வில்லை. செல்வி என்று சொன்னார்கள். வயதாக வயதாக பாசத்தில் அம்மா என்று சொன்றார்கள். மீனவர்களுக்கு ஆதரவாக விஜய் பேசுவது வரவேற்க தக்கது” என்றார்.