என்னை விமர்சிக்க தி.க., திமுகவிற்கு தகுதி இல்லை- சீமான்

 
இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.. - சீமான் கோரிக்கை..

மதுரையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

Seeman press meet mdu-01

அப்போது பேசிய சீமான, “என் மீது ஆதாரமில்லாத அவதூறான வழக்கு பதிவு, 15 ஆண்டுகளாக இழுத்தடித்து கொண்டு வருவதற்காக ஆதாரமற்ற வழக்கை தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன், எப்படி இவ்வழக்கு விசாரித்தாலும் அவதூறு வழக்காகத்தான் தெரியவரும், இவ்வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன். இவ்வழக்கில் உடன்பாடு செய்ய வாய்ப்புமில்லை, அதற்கான தேவையுமில்லை.

கம்யூனிஸ்ட் கட்சிகள் காம்ரேட்டில் இருந்து கார்ப்பரேட்டாக மாறி உள்ளது, இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த பொது பிரச்சனைக்கு போராடி வருகிறது, தமிழகத்தில் நடைபெறக்கூடிய பாலியல் வன்கொடுமைகளுக்கு குரல் கொடுக்கவில்லை, பாலியல் குற்றவாளி என நீதிமன்றம் கூறாத நிலையில் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் என்னை எப்படி பாலியல் குற்றவாளி என கூறுகிறார்? அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் போராட அனுமதிக்காத அரசும் இதில் குற்றவாளியாக தானே உள்ளது. இதில்  மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் குரல் கொடுக்கவில்லை?, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜீவானந்தத்துடன் செத்துப் போய்விட்டது. சங்கரய்யாவுடன் முடிந்து போய் விட்டது.

seeman

கம்யூனிட்டு கட்சியில் வாழும் மனித புனித தலைவர் அய்யா நல்லக்கண்ணு மட்டுமே உள்ளார். நல்லக்கண்ணுக்கு ஏன் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாடவில்லை? சிபிஎம் 90 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்கட்சியாக செயல்பட்ட நிலையில் தற்போது 6 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று குறுகி நிற்கிறது. இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புரட்சி, போராட்டங்களை எல்லாம் வறட்சியாக்கிவிட்டது. இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மார்க்கிஸியம் இருக்கு, மார்க்கிஸிய தலைவர்கள் எங்கே?, தமிழகத்தில் மார்க்கிஸ்ட் தலைவர்களை பிடிக்காமல் இல்லை, தலைவர்களிடம் செயல்பாடுகள் எங்கே?, எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தி இழிவு படுத்த வேண்டுமென செயல்படுக்கின்றனர். என்னை விமர்சிக்க தி.க., திமுகவிற்கு தகுதி இல்லை

நடிகை விஜயலட்சுமி என்னை மட்டுமல்லாமல் எனது தாய், மனைவி குறித்தும் பேசுகிறார், இவ்வழக்கில் 15 ஆண்டுகளாக அமைதி காத்தேன், இவ்விவாகரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதால் நீதிமன்றத்தை நாடி உள்ளேன், தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது என முதலமைச்சர் கூறியுள்ளார், அப்படி தமிழகத்தில் ஒரு லட்சம் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளது தானே?" என கூறினார்.