"நடிகையுடன் சமரசம் பேச வாய்ப்பில்லை"- சீமான்

 
சீமான் மீது  நடிகை விஜயலட்சுமி பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் புகார்!

நடிகை விஜயலட்சுமியுடன் சமரசம் பேச வாய்ப்பில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

பிரபாகரன் படம் வெட்டி ஒட்டப்பட்டதா? திராவிட நாய்கள்.. சீமான் பரபரப்பு பேட்டி

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “தன் மீதான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து இருப்பதை நான் வரவேற்கிறேன். 12 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட புகார் திரும்ப பெறப்பட்ட பிறகு விசாரிப்பது ஏற்புடையது அல்ல.  அதனால் சீமான் மீதான அனைத்து விசாரணைக்கும் தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விசாரணைக்கு தடை விதிக்கவேண்டும் என்றே நான் கோரியிருந்தேன். இது ஆதாரமில்லாத ஒரு அவதூறு வழக்கு. திட்டமிட்டு என் மீது சுமத்தப்பட்ட பழி. நடிகை விஜயலட்சுமியுடன் சமரசம் பேச வாய்ப்பில்லை. அதற்கான தேவையும் இல்லை. நீதிமன்றமே என்னை குற்றவாளி என கூறாத நிலையில், சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம், என்னை எப்படி பாலியல் குற்றவாளி எனக் கூறலாம்?

பாலியல் வன்கொடுமை வழக்குகளுக்கு எதிராக போராடவே தமிழக அரசு அனுமதி தரவில்லை. மார்க்சிஸ்ட் நிலைப்பாடு என்ன? நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் கம்யூனிஸ்ட்டுகள் வேறு பாலியல் வழக்குகளில் அமைதியாக இருப்பது ஏன்? எனக்கு எதிரான வழக்கு நிற்காது. விஜயலட்சுமியுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்க்க வாய்ப்பே இல்லை" என்றார்.