"வலுக்கட்டாயமாக புணர்ந்தால்தான் அது குற்றம்"- சீமான்

நடிகை வழக்கு ஒன்றும் புதிதல்ல ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் வழக்கை கையில் எடுப்பார்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை வந்திறங்கியவுடன் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “நடிகை வழக்கு ஒன்றும் புதிதல்ல, ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் வழக்கை கையில் எடுப்பார்கள். சம்மனை ஒட்டும்போது தடுக்கவில்லையே சம்மனை என் மனைவியிடமே கொடுத்திருக்கலாம். என்னுடைய வாட்ஸ் அப் எண்ணிற்கு சம்மனை அனுப்பி இருக்கலாம்.
-
நடிகை கொடுத்த புகாரில் முகாந்திரம் இல்லை என்பதால் அதிமுக ஆட்சி காலத்தில் என் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வரும்போது மட்டுமே என் மீது புகார்கள் வருகின்றன. காவல்துறையின் சம்மனை கிழிப்பதும் கிழிக்காததும் எங்கள் விருப்பம். அதற்காக கைது செய்வீர்களா? சம்மனை கிழிக்காமல் பூஜை அறையிலா மாட்ட முடியும்? சம்மனை கிழிப்பது பெரிய குற்றமா? சம்மன் நான் படிக்கவா, நாட்டு மக்கள் படிக்கவா? வீரனை வீரத்தால் எதிர்கொள்ள வேண்டும். திட்டமிட்டு என்னை அசிங்கப்படுத்தவே இப்படி செய்கிறார்கள்.
விருப்பமில்லாமல் ஒரு பெண்ணை கடத்தி வன்புணர்வு செய்தால்தான் குற்றம். நான் இருக்கும் உயரம் உங்களுக்கு பயத்தைக் காட்டுகிறது. வளர்ந்து விடுவேனோ என்ற அச்சம் வந்துவிட்டது. என்னை சமாளிக்க முடியாமல் அந்தப் பெண்ணை கூட்டி வருகிறார்கள்” என்றார்.