“விசாரணைக்கு நாளை வர முடியாது... உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்”- சீமான் அதிரடி

 
seeman

சம்மன் விவகாரத்தில் வளசரவாக்கம் போலீசாரிடம் நான் நேரில் வருவதாக கூறி உள்ளேன், வந்தே ஆக வேண்டுமென்றால் வர முடியாது என ஒசூரில் சீமான் பேட்டியளித்துள்ளார்.

seeman

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட நாதக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது. அதற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த சீமான், “என்னுடைய நீலங்கரை இல்லத்தில் போலீசார் சம்மன் ஒட்டியுள்ளனர். காவலாளியையும் கைது செய்துள்ளனர். என்னை விரட்ட வேண்டிய அவசியம் என்ன? இதுவரை அரசு எதில் இவ்வளவு தீவிரம் காட்டி உள்ளார்கள். சம்மன் ஒட்டியதை என் தம்பி கிளித்துள்ளார். நான் ஏற்கனவே விசாரணைக்கு வந்தவன் தானே, நாளை மறுநாள் வருவேன் என்றேன். நாளையே வர வேண்டுமென்றால் வர முடியாது. அந்த பெண்ணையும், என்னையும் நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும், மீண்டும் விசாரித்தால் அதை தான் கூறுவேன். விசாரிக்காமலேயே இதுதான் நடந்தது என்கிறீர்கள்! இதற்கு அஞ்சி பயந்து ஓடுவேன் அல்ல, வருவேன் நாளை வர முடியாது, உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்.

திமுக ஆட்சி நேரத்தில் இந்தம்மா வரும், அம்மையார் ஜெயலலிதா, எடப்பாடியார் அதிமுக 10 ஆண்டு ஆட்சியில் ஏன் வரவில்லை? தேர்தல் வந்தால் வருவார், என்னை சமாளிக்க முடியாததால் திமுகவினர் இந்தம்மாவை கூட்டி வந்து நிறுத்துகிறார்கள். பெரியார் வாங்கிய அடியில் என்ன செய்வதென தெரியாமல் இந்தம்மாவை அழைத்து வருகிறார்கள். விசாரித்து தானே தீர்ப்பு எழுத வேண்டும், விசாரணைக்கு முன்பே எழுதினால் எப்படி? விசாரிக்க வேண்டும், விசாரணையில் குற்றச்சாட்டிற்கான சான்றை கேட்க வேண்டும், சான்று படி நிரூபித்து குற்றம் குறித்து சொல்ல வேண்டும்... இந்த நாடகத்தை பார்க்க தான் போறேன், நாளை தருமபுரியில் கலந்தாய்வு கூட்டத்திற்கு செல்லவிருக்கிறேன்” என்றார்.