“என்னை மீறி முடிந்தால் இந்தி மொழியை திணித்து காட்டுங்கள்”- சீமான்

ஒன்றிய அரசு திராணி இருந்தால் சீமானி மீறி தமிழகத்தில் இந்திய திணிக்கட்டும், அப்பொழுது சீமான் யார் என தெரியும் என ஒன்றிய அரசுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆலோசனை கூட்டமானது தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிக்க முயல்கிறது. இந்தி மொழி படிக்க நினைக்கும் நபர்கள் படிப்பதிலும் மொழி கற்பதிலும் எந்த தவறும் இல்லை.ஒன்றிய அரசு திராணி இருந்தால் தமிழகத்தில் சீமானை மீறி சிந்திய திணிக்க முடியுமா? தமிழிசை சௌந்தரராஜன் தமிழில் மட்டும் தான் இசை என பெயர் வைத்துள்ளார். ஆனால் அவர் கூறுவது மிகவும் ஆபத்தானது. தமிழகத்தில் தமிழ் மொழி, ஆங்கில மொழி என இரு மொழிக் கொள்கைதான் இருக்க வேண்டும். நான் இன்னும் பெரியார் குறித்து முழுமையாக பேசவில்லை.பேசுவதற்கு முன்பே எனது வீட்டில் பெட்ரோல் கொண்டு வீசுவது எவ்வாறு நியாயம்?பேசுவதற்கு முன்பே பெட்ரோல் குண்டு என்றால் மீண்டும் பெரியார் குறித்து பேசினால் என்ன செய்வார்கள்?
பள்ளிகளில் ஆசிரியர்களாலே வன்கொடுமைக்கும் பாலியல் சீண்டல்களுக்கும் உள்ளாகும் மாணவியர். நாடெங்கிலும் நடக்கும் கொடுமைகள்.பெயரளவில் அப்பா என்று சொல்லிக்கொள்ளும் நாடக கம்பெனியின் தலைவர் முதல்வரிடம் கேளுங்கள்."அப்பாவிடம்" கேளுங்கள்"....ஒரு அரசியல் கட்சியில் உள்ளே நிறைய வரவும் வெளியே செல்லவும் செய்வார்கள், இது இயல்பானதே! எனது கட்சியில் மாவட்ட செயலாளர்கள் விளைவது குறித்து நான் கவலைப்படவில்லை, அது என் கட்சி சார்ந்த விஷயம். எனது கொள்கையை ஏற்று என்னுடன் இருப்பவர்கள் இருந்து கொள்ளட்டும் இல்லாதவர்கள் விலகிக் கொள்ளட்டும். கட்சியில் இருந்து விலகுவார்கள் யாரும் சீமான் நல்லவர் என்பது குறித்து தெரிவிப்பது இல்லை. இது அவர்களது விருப்பம்” என்றார்.