நான் பிரபாகரனை சந்திக்கவே இல்லை! போதுமா?- சீமான்

 
s

நான் பிரபாகரனை சந்திக்கவே இல்லை, அந்த போட்டோவில் இருப்பது நான் இல்லை... என நாம் தமிழ் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார்.

seeman

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “நான் அரசியல் அனாதை என்றால், ஏன் என் மீது பயம் வருகிறது..  பெரியாரை பற்றி பார்க்காமல் முதல்வரும், துணைமுதல்வரும் 10 நிமிடம் பேச சொல்லுங்கள் பார்க்கலாம்..  ஈரோடு கிழக்கில் சூரியன் மறைந்தால் தான் தமிழகத்திற்கு விடிவு. பெரியாரை தூக்கிப்பிடிக்கும் கட்சிகளுக்கு பெரியார் பற்றி பேசி வாக்குசேகரிக்க, துணிவு உண்டா?

நான் அடித்த அடியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நிலப்பரப்பில் இரும்புக் காலம் தொடங்கி இருக்குனு சொல்றாங்க.. அப்போ அந்த டைம்ல திராவிடம் ஏன் அங்க போகல..? தொன்மையான தமிழ் இரும்பை 50 ஆண்டுக்கு முன் வந்த திராவிடம் துரு பிடித்து இருந்தது.. அதை துடைத்து தமிழ் தேசியம் எரிந்து கொண்டிருக்கிறது. நான் பிரபாகரனை சந்திக்கவே இல்லை, அந்த போட்டோவில் இருப்பது நான் இல்லை” என்றார்.