பிரபாகரன் படம் வெட்டி ஒட்டப்பட்டதா? திராவிட நாய்கள்.. சீமான் பரபரப்பு பேட்டி

 
பிரபாகரன் படம் வெட்டி ஒட்டப்பட்டதா? திராவிட நாய்கள்.. சீமான் பரபரப்பு பேட்டி

பெரியார் குறித்து பேசியதற்கு ஆதாரத்தை உரிய நேரத்தில் அளிப்பேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “பிரபாகரன் உடன் நான் இருக்கும் புகைப்படம் வெட்டி, ஒட்டியது என்றால் அதற்கு ஆதாரம் தாருங்கள். 15 ஆண்டுகளாக இந்த படம் உள்ளது. இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் நானும் பிரபாகரனும் இருக்கும் புகைப்படத்தை வெட்டி ஒட்டியதாக கூறுகிறார். எப்படி வெட்டி, ஒட்டினார் என்பதனை அவரிடமே கேளுங்கள். 15 வருடமாக எங்கே போனார்?. என்னிடம் நேரடியாக சொல்ல சொல்லுங்கள்.  திராவிட நாய்கள் எதற்கும் நேரடியாக பதில் சொல்லாது.

பெரியாரை உலகத்திலேயே அதிகமாக விமர்சித்த கட்சி திமுக தான். தமிழ் மொழிக்காக போராடியவர்களை சிறுமைப்படுத்தியவர் பெரியார். பெரியார் குறித்த எனது பேசியதற்கு ஆதாரத்தை உரிய நேரத்தில் அளிப்பேன். பெரியார் குறித்து பேசுபவர்கள் வீட்டில் பெரியார் படம் இருக்கிறது. ஆனால் அம்பேத்கர் படம் இருக்கிறதா? என்னை முதலமைச்சராக்காமல் இவர்களெல்லாம் ஓயமாட்டார்கள். கோட்டையை முற்றுகையிடுவது தமிழர் மரபு, வீட்டை முற்றுகையிடுவது திராவிடர் மரபு. உமையான கம்யூனிசம், பெண்ணுரிமை, சமூகநீதி எங்களிடம்தான் உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு துணிவுள்ளதா?” என கேள்வி எழுப்பின்மார்.