கள்ளு கடைக்கு தடை! டாஸ்மாக்கில் விற்கப்படும் மது புனித தீர்த்தமா?- சீமான்

 
seeman

கள் தடை அவசியமற்றது. வேறு எந்த மாநிலத்திலும் கள் இறக்க தடை இல்லை. நம்ம மாநிலத்தில் மட்டும் கள் எடுத்து தடை எதற்கு? டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படுவது என்ன கோயில் தீர்த்தமா? கள் இறக்க அனுமதி கொடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

seeman

விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “பெரியார் பெரியார் என்று பேசுபவர்கள். பெரியாரைப் பற்றி பேசி வாக்கு கேளுங்களேன். பெரியார் தாலி அடிமை சின்னம் அதனை அறுத்து எரியவேண்டும், கோயிலுக்கு சென்று சாமி கும்பிடுவது காட்டுமிராண்டித்தனம் என பேசியுள்ளார், பெண்கள் கருப்பையை அறுத்து எரிய சொல்லியுள்ளார், மது குடிப்பதை தடுப்பவர்கள் மனைவியுடன் உறவு வைக்கக்கூடாது என கூறியுள்ளார், இப்படி பெரியார் பேசியதை கூறி வாக்கு கேளுங்களேன்.... தமிழ் மொழி சனியன் என்றும், காட்டுமிராண்டு மொழி என்றும், முட்டாள் பாஷை என பேசியுள்ளார், இதனைக்கூறி வாக்கு கேளுங்களேன். பெரியாரை சீமான் விமர்சனம் செய்துவிட்டார், அதனால் சீமானுக்கு வாக்கு அளிக்க வேண்டாம் என பேசுங்கள். இப்போது பெரியாரை பேசி வாக்கு வாங்கபோகிறீர்கள் அல்லது காந்தி நோட்டு கொடுத்து வாக்கு சேகரிப்பீர்களா? பெரியார் எந்த மதத்திற்கு எதிரானவர். கிறிஸ்தவன், இஸ்லாமியன் என் எதிரி கூறிய பெரியார், எந்த மாதத்திற்கு எதிரானவர்? பெரியாரை விமர்சனம் செய்துவிட்டால் அவர் சங்கி என்றும் பிஜேபி எனவும் விமர்சனம் செய்யப்படுகிறது.

ராஜாஜி என்ற பார்ப்பனரோடு கூட்டணி வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள் யார்? ராஜாஜியுடன் கடைசி வரை நட்போடு இருந்தவர்கள் யார்? பாரதிய ஜனதா கட்சியின் தாய் கழகமான ஜன சங்கத்துடன் கூட்டணி வைத்திருந்தவர் யார்? பாஜகவோடு கூட்டணி வைத்தவர்கள் யார்? திராவிடம் அதிகாரத்திற்கு போகவே ஆரிய தலைமையுடன் கூட்டணி வைத்த கூட்டணிகள். திராவிடம் அரியணை ஏற பீகார் பார்ப்பனன் பிரசாந்து கிஷோர் பாண்டே தேவைப்படுகிறார். இப்போது ராபின் சர்மாவை கூட்டி வந்திருக்கிறார்கள் அவர் ஒரு ஆரியர். நீங்கள் மேலே வருவதற்கு அவன் பக்கத்தில் இருக்க வேண்டியிருக்கிறது. அவன் மூளை தேவைப்படுகிறது. ஆனால் எங்களை சங்கி எனது விமர்சனம் செய்கிறார்கள்... கள் தடை அவசியமற்றது. வேறு எந்த மாநிலத்திலும் கள் இறக்க தடை இல்லை. நம்ம மாநிலத்தில் மட்டும் கள் எடுத்து தடை எதற்கு? டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படுவது என்ன கோயில் தீர்த்தமா? கள் இறக்க அனுமதி கொடுக்க வேண்டும்” என்றார்.