“பெரியார் என்ன புரட்சி செய்தார்?” - சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு

பெரியார் எந்த சமுதாயத்திற்கு நீதியை பெற்று கொடுத்தார்? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “பெரியார் குறித்து பேச பொது விவாதத்திற்கு நான் இருகரம் நீட்டி தயாராக உள்ளேன். பெரியார் என்ன சமூகநீதி செய்தார்? பெண்ணுரிமை பற்றி பேச பிரபாகரனுக்கு மட்டுமே தகுதியுள்ளது. அம்பேத்கருடன் பெரியாரை ஒப்பிட்டு பேசுவதை நிறுத்துங்கள். வள்ளலார், வைகுண்டர் போல என்ன புரட்சியை பெரியார் செய்தார்? பெரியார்தான் சமூகநீதியை நிலைநாட்டினார் என்றால் 10.5 சதவீத இட ஒதுக்கீடு பாமக ஏன் போராடுகிறது. ஆரியத்தோடு கைகோர்த்துக் கொண்டு எதிர்ப்பதாக பெரியாரும் அண்ணாவும் கூறினர். ஆனால் திராவிடத்தை ஆதரித்த பெரியார் ஆரியத் தலைமையுடன் நட்புடன் இருந்தார். பெரியாரின் தத்துவங்களை மட்டுமே பேசி ஓட்டு சேகரிக்க எந்த தலைவராவது தயாராக உள்ளனரா? நாங்க பெரிய புராணம் பாடினால் உங்களுக்கு புடிக்கல... நீங்க பெரியார் புராணம் பாடினால் எங்களுக்கு புடிக்கல...
நாங்க பெரிய புராணம் பாடினால் உங்களுக்கு புடிக்கல
— ச. பாலா பாலா (@SBalaBala6) January 12, 2025
நீங்க பெரியார் புராணம் பாடினால் எங்களுக்கு புடிக்கல.
ராமசாமிய போட்டு மிதிக்காத நாளே இல்ல.
செந்தமிழன் சீமான் 🔥🔥🔥 pic.twitter.com/QtdNeghPci
பொங்கல் பண்டிகை தினங்களில் யுஜிசி தேர்வு நடத்துவது எந்த விதத்தில் நியாயம்; தமிழர் திருநாளில் இதுபோன்று தேர்வு நடத்தும் மத்திய அரசால் மற்ற மாநிலங்களில் நடத்த முடியுமா..? ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி உறுதியாக போட்டியிடும். பொங்கல் அன்று ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும்” என்றார்.