“உடல் இச்சை வந்தால் தாயோ, மகளோ..”- பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு
உடல் இச்சை வந்தால் தாய், மகள், சகோதரியுடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என பெரியார் கூறியதாக சீமான் பேசியதால் சர்ச்சை வெடித்துள்ளது.
கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “உலகில் எந்த நாட்டில் மது இல்லை. உடல் இச்சை வந்தால் பெற்ற தாயிடமோ, மகளிடமோ உறவு வைத்துக் கொள் எனக் கூறுவதுதான் பெண் உரிமையா? திராவிட கழகங்களுக்கு என்ன தத்துவம் இருக்கிறது. கள் இறக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்னை மரங்களை வெட்டியவர் பெரியார். மரத்தை வெட்டி சாய்ப்பதுதான் பகுத்தறிவா? அல்லது எங்கள் தோப்பில் கள் இறக்க அனுமதி இல்லை என்று கூறுவது பகுத்தறிவா? தந்தை பெரியாருக்கும், சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. சமூக நீதிக்காக போராடியது தந்தை பெரியாரா? அல்லது ஆனைமுத்துவா?
பொங்கல் பரிசு என்பது ரூ.5,000ல் இருந்து தற்போது ரூ.103-க்கு வந்துள்ளது. அது 3 ரூபாய்க்கு வரும் முன் நாம் விழித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நெற்றியில் ஒற்றை ரூபாயை ஒட்டி புதைத்து விடுவார்கள்” எனக் கூறினார்.