தனது கோபத்தை சாட்டையால் அடித்து வெளிப்படுத்திய அண்ணாமலையை விமர்சிக்க முடியாது. - சீமான்
அண்ணாமலையின் கோபத்தை குறைத்து மதிப்பீடு செய்யக்கூடாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “அண்ணாமலையின் கோபத்தை குறைத்து மதிப்பீடு செய்யக்கூடாது. எனக்கும் கோபம் இருக்கிறது. அதற்காக தன்னைத்தானே சாட்டையில் அடித்துக் கொள்ளக் கூடாது. குற்றவாளியைதான் சாட்டையால் அடிக்க வேண்டும். நம்மை ஏன் அடிக்க வேண்டும்? தனது கோபத்தை சாட்டையால் அடித்து வெளிப்படுத்திய அண்ணாமலையை விமர்சிக்க முடியாது. செருப்பு அணிய மாட்டேன் என்றெல்லாம் அண்ணாமலை கூறியதை ஏற்க முடியாது.
பாமக 35 வருட கட்சி, அவர்களின் நேற்றைய பிரச்சனை விரைவில் சரியாகிவிடும். வார்த்தை மோதல் குறித்து நான் கருத்து கூற முடியாது. நம்பிக்கையின் அடிப்படையில் நிர்வாகிகளை ராமதாஸ் நியமிக்கிறார். அன்புமணிக்கு கூட தலைவர் பதவியை நம்பிக்கையின் அடிப்படையில் தான் ராமதாஸ் வழங்கி இருக்கிறார். காலை உணவு கூட கிடைக்காத அளவிற்கா மாணவர்களை வைத்துள்ளீர்கள். தமிழ்நாடு என்ன சோமாலியாவா? காலை உணவு திட்டத்தில் 7 நாளில் நாட்கள் உப்புமா?” எனக் கேள்வி எழுப்பினார்.