"மார்க்கெட் இல்லாத ஹீரோவை வைத்து யார் படம் எடுப்பார்கள்" - சீமான் அட்டாக்

 
இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.. - சீமான் கோரிக்கை..

மார்க்கெட் இல்லாத ஹீரோவை வைத்து யார் படம் எடுப்பார்கள் என விஜய்யை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

சீமான்


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,  “சென்னையே ஒரு ஏரி நகர் தான்.. நீரின்றி அமையாது உலகுன்னு சொன்னவருக்கு ஏரியை எடுத்துட்டு வள்ளுவர் கோட்டம்ன்னு கட்டி வச்சிருக்கீங்க... 4000 கோடி ஒப்பந்தம்னு வேக வேகமாக தோண்டுனீங்க.. அது எல்லாம் என்ன ஆச்சு? என்னிடம் ஆட்சியை ஒரு 5 ஆண்டு ஆட்சிய கொடுங்கள். மழைநீர் தேங்கினால் என்னால் முடியவில்லை என ஆட்சியை விட்டே போயிடறேன். கழிவுநீர், மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாதபோது மெட்ரோ ரயில் எதற்கு? மார்க்கெட் இல்லாத ஹீரோவை வைத்து யார் படம் எடுப்பார்கள்.

வேலையே இல்லாத தையல்காரர் யானைக்கு டவுசர் தைப்பது போல தான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டமும். ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தலையே உங்களால் நடத்த முடியவில்லை. இதுல ஒரே நாடு ஒரே தேர்தலா? மக்கள் அரசியல் இல்லை.. கட்சி அரசியல், தேர்தல் அரசியல்தான் இருக்கிறது” என்றார்.