“முடிஞ்சா என்ன கைது பண்ணி பாரு”... அரசுக்கு சீமான் சவால்

 
இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.. - சீமான் கோரிக்கை..

திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் ஜாதி வெறுப்புடன் செயல்படுகிறார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

seeman


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் ஜாதி வெறுப்புடன் செயல்படுகிறார். சாட்டை துரைமுருகனை குறி வைத்து திருச்சி எஸ்பி வருண்குமார் செயல்படுகிறார். ஐபிஎஸ் வருண்குமார் தேவர், நாடார், கோனார், தேவேந்திரர்களுக்கு எதிராக செயல்படுகிறார். தேவர், நாடார், கோனார், தேவேந்திரர்கள் மீது வருணுக்கு பிறப்பு வெறுப்பு. ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் ஜாதி வெறுப்புடன் செயல்படுகிறார் என்பதற்கு ஆதாரம் உள்ளது.


திமுகவினர் பேசினால் கருத்துரிமை எதிர்க்கட்சிகள் பேசினால் அவமதிப்பா? முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி தவறாக பாடியதால், சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளார்கள். கள்ளத்தனம் செய்த கிராதகன் கருணாநிதி, சதிகாரன் கருணாநிதி என நான் பாடுகிறேன், என் மீதும் வழக்குப்பதிவு செய்யுங்கள். பிள்ளைப்பூச்சியை பிடித்து விளையாடுவீர்கள், தேள், பாம்புவை பிடிப்பீர்களா? உங்கள் அப்பாவை புனிதர் ஆக்க முயற்சிக்கிறீர்களா? கருணாநிதி என்ன இறைத்தூதரா...? அவரை பற்றி வாய் திறந்தாலே கைதா?” என சவால் விட்டுள்ளார்.