"நான் யார் என்று தெரியுமா? எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது..." சீமான் ஆவேசம்

 
விடிய விடிய ஓய்வெடுக்க விடாமல்.., முதல் நாளே வதைப்பதா?? - சீமான் கண்டனம்..

எனக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது, எனக்கென்று ஒரு கூட்டம் இருக்கிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

seeman vijayalakshmi


நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 10 ஆம் தேதி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் சீமான்  ஆஜராகவில்லை. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதால் வழக்கில் ஆஜராக அவகாசம் வழங்கும்படி சீமான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி  காவல் நிலையத்தில் ஆஜராவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் சீமான் ஆஜராகவில்லை. சீமானுக்கு பதிலாக வளசரவாக்கம் காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சங்கர் ஆஜரானார். இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2வது முறையாக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர் .  

இந்நிலையில் சென்னை அயனாவரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், அரை நூற்றாண்டு கால திராவிட ஆட்சியின் சாதனை என்பது 1000 ரூபாய்க்கு எம் மக்களை கையேந்த வைத்தது தான். முதல்வர் தந்த 1000 ரூபாய்ல மருந்து வாங்குவேன்னு ஒரு அம்மா சொல்கிறார்.. என்ன மருந்து விஷ மருந்தா? ஆயிரம் ரூபாய் மூலம் மகளிர் என்ன வளர்ச்சி கண்டுவிடுவார்கள்? இந்த திட்டத்துக்கான பணம் யாருடையது? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.

இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.. - சீமான் கோரிக்கை..

தொடர்ந்து நடிகையின் பாலியல் புகார் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த சீமான், “2 லட்சுமி வெடியை வைத்து பெரிய மலையை தகர்க்க பார்க்கிறார்கள் . இப்போது அழைப்பாணை வழங்கும் காவல்துறை 13 ஆண்டுகளாக என்ன செய்தது? நான் யார் என்று தெரியுமா? எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது... என்ன யாருன்னு நினைச்சுட்டு இருக்க..? நான் கேடு கெட்ட ரவுடி பையன்,  ட்எனக்கு வேற முகம் இருக்கு! சிரிக்க சிரிக்க பேசுபவன் என்று நினைக்க வேண்டாம்... ரொம்ப சீரியஸான ஆளு.. ஒரு லட்சம் துப்பாக்கிகளை கடந்து சென்று தலைவர் பிரபாகரனை சந்தித்து வந்தவன் நான். என்னிடம் தனலட்சுமியும் தான்யலட்சுமியும் தான் இல்லை, முடிந்தால் 10 பேரை அனுப்பி வையுங்கள். எனக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது, எனக்கென்று ஒரு கூட்டம் இருக்கிறது. என்னை ஸ்கெட்ச் போட்டு தூக்க வீரலெட்மி யார்? ஒரு ஸ்கெட்ச் பேனாவை கூட அவரால் தூக்கமுடியாது. என் மீது புகார் கூறிய இரு லட்சுமிகளும் வேண்டாம், எனக்கு தனலட்சுமியும், தான்யலட்சுமியும் தான் வேண்டும்” என்றார்.