மகன் சனாதனத்தை எதிர்க்கிறார்... அப்பா சமாதானம் பேசுகிறார்- சீமான்
சிவகங்கையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய சீமான், “சனாதன கோட்பாடு பல்லாயிரம் ஆண்டு காலமாக உள்ளது. ஒரு மதத்தை இழிவு படுத்துவது எப்படி ? மனித குலத்தை இழிவுபடுத்துவது, பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு பாகுபாடு உள்ளது தான் சனாதன கொள்கை. உண்மையிலே பகவத் கீதையில் அப்படி சொல்லி இருக்கிறதா? பிரம்மன் தலையிலிருந்து பிராமணன் படைத்தேன், தோளிலிருந்து சத்ரியன், தொடையிலிருந்து வைஷ்ணவனை படைத்தேன், காலில் இருந்து சூத்திரனை படைத்தேன் சொல்லப்பட்டுள்ளதா? ஒரு மனிதனின் பிறப்பில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? சமத்துவ சகோதரத்துவ சமூகத்தை உருவாக்க திமுக ,அதிமுகவினர் என்ன முன் முயற்சி எடுத்தார்கள்? திமுகவே சனாதனத்தில் ஊரிப்போன கட்சி. மகன் சனாதனத்தை எதிர்க்கிறார்... அப்பா அதற்காக மோடியிடம் சென்று சமாதானம் பேசுகிறார்... INDIA கூட்டணியில் உள்ள ஒரு கட்சிக்கூட G20 -க்கு செல்லாதபோது முதல்வர் மு.க.ஸ்டாலின் போனது ஏன்?
சனாதன ஒழிப்பு என்பது தமிழ் வார்த்தையே இல்லை அதுவும் சமஸ்கிருதம். பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு உள்ள கோட்பாட்டை எதிர்க்கிறேன் என்று சொல்லுங்கள். இது ஒரு மன நோய். வைரஸ் என்றெல்லாம் அதைத்தான் உதயநிதி சொல்லி இருக்கிறார். சனாதானத்தை ஏற்கும் காங்கிரஸ் கூட்டணி எதற்கு? காவிரியில் பிஜேபி ஆண்டாலும், காங்கிரஸ் ஆண்டாலும் தண்ணீர் தரவில்லை. நம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் பொழுது அவர்களோடு கூட்டணி எதற்கு? நாட்டில் காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் பிஜேபி ஆட்சியிலும் ஜனநாயகம் எங்கு இருக்கிறது” என்றார்.