வள்ளலாரை தாண்டி பெரியார் செய்த சமூக சீர்திருத்தம் என்ன? - சீமான் கேள்வி

 
seeman

பெரியார் குறித்து கலைஞர் எழுதிய புத்தகங்களை அரசுடமையாக்கி வைத்துக் கொண்டு ஆதாரம் கேட்கின்றனர் என சீமான் கூறியுள்ளார்.

பெரியார் குறித்த சீமானின் கருத்து சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்த பேச்சுக்கு ஆதாரம் கேட்கிறார்கள். பெரியார் குறித்து கலைஞர் எழுதிய புத்தகங்களை அரசுடமையாக்கி வைத்துக் கொண்டு ஆதாரம் கேட்கின்றனர். தமிழர்...தமிழர்கள் என்று பேசினால் எதிரியா?

யார் திராவிடம், நான் யாருக்கும் அடிமையில்லை... எனக்கு யாரும் அடிமையில்லை. தமிழை சனியன் என்று பேசியவர் பெரியார். திராவிடம் பேசி, எங்களை ஒழித்துவிட்டார்கள். இஸ்லாமியர்கள் வேறு நாட்டவர்கள் என பெரியார் சொல்லியிருக்கிறார். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் எதிரியா?. எல்லா தேசிய இனத்திற்கும் வரலாறு, பண்பாடு தருவது மொழி தான். வள்ளலாரை தாண்டி பெரியார் செய்த சமூக சீர்திருத்தம் என்ன?. காலத்திற்கு ஏற்றது போல் மாற வேண்டும் என கூறினார்.