பெண்களால் 13 ஆண்டுகள் எனக்கு வன்கொடுமை- சீமான்

 
சீமான்

பெண் வன்கொடுமை குறித்து பேசுபவர்கள் ஆண்களுக்கு நிகழ்வும் வன்கொடுமை குறித்தும் பேசுங்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.. - சீமான் கோரிக்கை..

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக கொடுக்கப்பட்டிருந்த பொய் புகார் திரும்பப் பெறப்பட்ட நிலையிலும் அதன் மீதான விசாரணைக்காக நேரில் வருமாறு, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அழைப்பாணை கொடுக்கப்பட்டிருந்ததையொட்டி, இன்று 18-09-2023 சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் அவர்கள் வழக்கறிஞர் பாசறை வழக்கறிஞர்களுடன் விசாரணைக்கு ஆஜரானார். அவருடன் வழக்கறிஞர் என்ற முறையில். அவரது மனைவி கயல்விழியும் காவல்நிலையத்திற்கு வந்தார்.

விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றபோதும் சட்டத்துக்கு நான் ஒத்துழைப்பு தரவில்லை என புகார் வரக்கூடாது என்பதால் ஆஜரானேன். விஜயலட்சுமியின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்தேன். வழக்கறிஞர் என்ற முறையில் என் மனைவி என்னுடன் காவல்நிலையத்திற்கு வந்துள்ளார். நடிகை விஜயலட்சுமி முன்னுக்கு பின் முரணாக பேசிவருகிறார், என் மதிப்பை குறைப்பதற்காகவே வழக்கு போட்டுள்ளனர். 8 முறை கருக்கலைப்பு செய்ய வைத்தேன் என்பது நகைச்சுவை. கடந்து போய்விடுவோம் என இவ்வளவு நாட்களாக அமைதியாக இருந்தது தான் தவறு.

என் பெயருக்கு களங்கள் விளாஇவிக்க முயற்சி செய்த வீரலட்சுமி என்னிடம் பொதுவெளியில் மன்னிப்பு கேட்கவேண்டும். சிறைச்சாலை கட்டுவதே எங்களுக்காகதான் என வாழ்பவர்கள் நாங்கள். தேர்தல் வரவுள்ள நிலையில், தற்போது ஏன் புகார் அளிக்க வேண்டும். பெண்களால் 13 ஆண்டுகள் எனக்கு வன்கொடுமை. 13 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கால் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளேன். பெண் வன்கொடுமை குறித்து பேசுபவர்கள் ஆண்களுக்கு நிகழ்வும் வன்கொடுமை குறித்தும் பேசுங்கள்” என்றார்.