பெருங்காமநல்லூர் ஈகியர் நினைவிடத்தில் சீமான் வீரவணக்கம்
Apr 3, 2025, 17:59 IST1743683341447

பெருங்காமநல்லூர் ஈகியர் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீரவணக்கம் செலுத்தினார்.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில், “குற்றப்பரம்பரை என்ற பட்டத்தைச் சுமத்தி, கைரேகைச் சட்டத்தைத் திணித்த ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரக்கிளர்ச்சி செய்து, இரத்தம் சிந்தி உயிர் ஈகம் செய்த நம்மின முன்னோர்கள் பெருங்காமநல்லூர் போராளிகளுக்கு நாம்தமிழர்கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், இன்று (03-04-2025), மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அமைந்துள்ள பெருங்காமநல்லூர் ஈகியர் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது” எனக் குறிப்பிட்டுள்ளார்.