தொண்டர்களுடன் ஈபிஎஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் - சீமான் வாழ்த்து

 
tn

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்தினை கூறியுள்ளார்.

tn

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தகுதி இல்லத்தில் தொண்டர்களுடன் 69 ஆவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் 69 கிலோ எடை கொண்ட கேக்கினை வெட்டி தனது பிறந்தநாளை தொண்டர்களுடன் உற்சாகமாகக் கொண்டாடினார்.  அதைத் தொடர்ந்து அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் 125 பேர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சீருடை,  புடவை , இனிப்புகளை  வழங்கி சிறப்பித்தார்.
 இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! என்று பதிவிட்டுள்ளார்.