கமல் ஹாசனுடன் இந்தியன் 2 திரைப்படத்தை கண்டு களித்த சீமான்

 
t

‘இந்தியன் - 2’ திரைப்படத்தை  கமல்ஹாசன் மற்றும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பார்த்து ரசித்தனர். 

indian 2

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் 2 வெளியாகி உள்ளது.  இப்படத்தில் நடிகர்கள் பாபி சிம்ஹா, சித்தார்த், சமுத்திரக்கனி, ப்ரியா பவானி சங்கர்,  காஜல் அகர்வால்,  ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளது . லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ள நிலையில் இசையமைப்பாளர் அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார் .



தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 9 மணி அளவில் இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. இந்தியன் 2 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் ஏராளமான ரசிகர்கள் காலை முதலே படத்தை பார்த்து வருகின்றனர்,  திரைப்படத்தை ரசிகர்களுடன் கண்டுகளிக்க சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு நடிகர் கமல் ஹாசன் மற்றும் இயக்குனர் சங்கர் ஆகியோர் வருகை புரிந்திருந்தனர். குறிப்பாக இந்தியன் 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் நடிகர் கமல்ஹாசனுடன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.