பொய்த்துப் போன சீமானின் பொது வேட்பாளர் கனவு!

 
seeman

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் தமிழக அரசியலில் சூடு பிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பொது வேட்பாளர் கனவு பொய்த்துப் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. 

seeman

தன்னை அம்பையில் பொது வேட்பாளராக அறிவித்த நாள் முதல், சீமான் பல கட்சி தலைவர்களிடம் ஆதரவு கேட்டு வருகிறார். திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி இருவரிடமும் பேசிய போது, "தேதி அறிவிக்கட்டும், பிறகு பேசலாம்" என கூறி நழுவி விட்டனர். திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தால் ஏற்பேன் என சீமான் வெளிப்படையாக அறிவித்தது நாதக தொண்டர்களையே குழப்பத்தில் ஆழ்த்தியது. ஏற்கனவே பேசி முடித்துவிட்டாரா என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனால் உண்மையில் வேட்பாளராக அறிவித்த பிறகு தான் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார் சீமான்.

ஒரு சில தலைவர்களின் வீடு தேடி நேரடியாக சென்றுகூட ஆதரவு கேட்டுள்ளார். ஆனால் இதுவரை எந்த கட்சியும் "சீமானுக்கு ஆதரவு" என வெளிப்படையாக அறிவிக்கவில்லை. திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே தங்களுக்கு லாபம் இல்லாமல் நாதகவை ஆதரிக்காது என்பது தெளிவாகிவிட்டது. இதனால் சமூக தலைவர்களின் பக்கம் திரும்பியுள்ளார் சீமான். ஏற்கனவே ராக்கெட் ராஜாவிடம் பேசி முடித்துள்ளதாகவும், முக்குலத்தோர் வாக்குகளை எப்படி திருப்புவது என தெரியாமல் தவிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுடன் சீமான் நெருக்கம் காட்டி வருகிறார். சரத்குமார் பிறந்தநாள் விழாவில் இருவரும் நெருக்கமாக இருந்ததும், பாஜகவை வம்புக்கு இழுக்காமல் தவெக மற்றும் விஜய்யை மட்டுமே நாதக தாக்கி வருவதும் இதற்கு சாட்சி. மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு கொடுத்த பாணியில், அம்பையிலும் ஆதரவு கிடைக்கும் என சீமான் எதிர்பார்க்கிறார்.

சொந்த தொகுதியிலேயே திணறும் நிலையில், அவரை நம்பி சீமான் எப்படி அம்பையில் இறங்குவார்? அம்பாசமுத்திரத்தில் நாதகவுக்கு ஓட்டுக்களும் குறைவாகவே உள்ளன! கடந்த தேர்தல்களில் வாங்கிய ஓட்டை வைத்து பார்த்தால், இந்த முறை டெபாசிட் கிடைப்பதே அரிது தான்! பொது வேட்பாளர் ஆதரவு இல்லாமல் தனித்து நின்றால், சீமானுக்கு பெரும் பின்னடைவாகவே இந்த தேர்தல் அமையும்" என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இதனால் சோகத்தில் உள்ள சீமான், அடுத்தகட்ட திட்டம் குறித்து நாதக நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.