விஜயலட்சுமி வழக்கில் சீமான் இன்று ஆஜராகவில்லை!!
நடிகை விஜயலட்சுமி வழக்கில் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமான் இன்று ஆஜராகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காலை 10.30 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பினர். அதில், விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தங்களை விசாரணை செய்ய வேண்டியுள்ளது அவசியமாகிறது. எனவே தாங்கள் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் சாலையில் உள்ள ஆர் 9 வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 09/09/23 இன்று காலை 10:30 மணிக்கு நேரில் ஆஜராக அறிவுறுத்தப்படுகிறது என்று காவல் ஆய்வாளர் சம்மன் அனுப்பி இருந்தார்.
இந்த சூழலில் நடிகை விஜயலட்சுமி வழக்கில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் இன்று ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதால் வரும் 12ஆம் தேதி அன்று ஆஜராவதாக சீமான் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.