மூளைக்காய்ச்சலாம் பாதிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சி உறுப்பினர் - நிதியுதவி அளிக்க சீமான் கோரிக்கை..

 
seeman


மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சி உறுப்பினரின் மருத்துவச் செலவிற்கு  உதவிடுமாறு , அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்போரூர் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி உறவு, 23 வயது அன்புத்தம்பி ரியாஸ்கான் அவர்கள் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு  தொடர் வலிப்பு ஏற்படுவதன் காரணமாக கோவளத்தில் உள்ள மாதா பிதா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.  

 நிதியுதவி..

தொடர் வலிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்கான,  நரம்புகளுக்கான உயர் சிகிச்சையளிக்க  உடனடியாக ஐந்து லட்ச ரூபாய் தேவைப்படும் நிலையில், தம்பியின் வறுமைச்சூழல் காரணமாக, பணத்தைச் செலுத்த முடியாமல் அவரது குடும்பத்தினர் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

எனவே, எனதன்பு தாய்த்தமிழ் உறவுகள் தங்களால் இயன்ற தொகையினை தம்பி ரியாஸ்கானின் மருத்துவச் சிகிச்சைக்கு ( Gpay No: 7358549821) அளித்து, அவரது உயிர் காத்திட வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பாதிக்கப்பட்டுபவருக்கு உதவிட வங்கிக் கணக்கு ஒன்றையும் அவர் வழங்கியுள்ளார்.