அவரைப்போல சிறந்த மனிதராக யாரும் வரமுடியாது - சீமான் உருக்கம்!!
Dec 29, 2023, 09:01 IST1703820664765
பார்ப்பதற்கு கம்பீரமாக இருந்தாலும் குழந்தை மனம் கொண்டவர் விஜயகாந்த் என்று சீமான் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மனதை தேற்றிக்கொள்ள முடியவில்லை. கேப்டன் விஜயகாந்தின் தவசி படத்துக்கு வசனம் எழுதுனேன். அப்போது அண்ணன் விஜயகாந்துடன் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தது.

தமிழ்நாட்டின் அரசியல் போக்கையே மாற்றியவர் கேப்டன் விஜயகாந்த். எதற்கும் பயப்படமாட்டாரு. நல்ல மனிதர் என அவரை அடக்கிவிட முடியாது. ஆகச்சிறந்த மனிதர். பார்ப்பதற்கு கம்பீரமாக இருந்தாலும் குழந்தை மனம் கொண்டவர். இனி அவரைப்போல் நடிப்பதற்கும், சண்டை போடுவதற்கும் ஆட்கள் வரலாம். ஆனால். அவரைப்போல சிறந்த மனிதராக யாரும் வரமுடியாது” என்று தெரிவித்துள்ளார்.


