“இந்த தொகுதியிலேயே 3 முறை பிச்சை எடுத்து விட்டேன், இப்பவாவது எனக்கு ஓட்டு போடுங்க..”- சீமான்

 
சீமான்

பிப்ரவரி 5.ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் நாதக சார்பில் சீதாலட்சுமி மற்றும் சுயேட்சைகள் உட்பட 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

விடிய விடிய ஓய்வெடுக்க விடாமல்.., முதல் நாளே வதைப்பதா?? - சீமான் கண்டனம்..


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம்தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து ஈரோடு சம்பத் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்பு பேசினார். அப்போது பேசிய அவர், இந்த தொகுதியிலேயே 3 முறை பிச்சை எடுத்து விட்டேன், இப்பவாவது எனக்கு ஓட்டு போடுங்க..   பசிக்காக வீட்டு வாசலில் பிச்சை கேட்டு தொடர்ந்து நிற்கும் பிச்சைகாரனுக்கு கூட மனமிறங்கி ஏதாவது இருப்பதை போடுவார்கள். ஆனால் இந்த தொகுதியில் நான் 3 முறை பிச்சை எடுத்து விட்டேன், இதற்கு மேல் என்னால் கேட்க முடியாது என பிச்சைக்காரனோடு ஒப்பிட்டு ஆதரவு கோரினார். 

வழக்கமாக மேடையில் இடது புறம் இருக்கும் சீமானின் புகைப்படம் இன்றைய பொதுக்கூட்ட மேடையில் இடம்பெறவில்லை. மேடையை ஒட்டி ஒரு வழிப்பாதையில் போக்குவரத்து இருந்ததால், முன் எச்சரிக்கையாக புகைப்படம் தவிர்க்கப்பட்டிருந்தது.  இதனிடையே, கடந்த சில தினங்களாக வாகன பேரணிக்கு பொதுமக்களிடம் வரவேற்பு இல்லாத காரணத்தால், இன்று வாகன பேரணியை புறக்கணித்த சீமான், நேரடியாக சம்பத் நகர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.