“இலவசமாக புள்ள தாரேன்னு சொன்னா வாங்குவீங்களா?”- சீமான்
இலவசம் என்றால் அனைத்தையும் வாங்கிக்கொள்கிறீர்கள், இலவசமாக புள்ள தாரேன்னு சொன்னா வாங்குவீங்களா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருக்கோவிலூரில் பரப்புரையில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “குறிப்போடு பேசக்கூடாது, குறிக்கோளோடு பேச வேண்டும். ஒரு முறை எங்கள் பிள்ளைகளின் ஆட்சியை பாருங்கள். வாக்குக்கு காசு கொடுக்கும் அந்த இடத்திலேதான் ஊழல், லஞ்சத்திற்க்கான விதை ஊன்றபடுகிறது. இவர்கள் அந்த முதலீட்டுக்கு மேல் பணத்தை எடுக்க விரும்புவார்களே தவிர, சேவை செய்ய முனைவதில்லை. ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் போராடுகின்றனர். இதை சிறந்த ஆட்சி என்கிறார் முதல்வர்.
இலவசமாக திருமணம் செய்துவிட்டேன், இலவசமாக அனைத்து கொடுத்தார்கள். அனைத்தையும் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுகிறீர்கள். இலவசமாக புள்ள தாரேன்னு சொன்னா வாங்குவீங்களா? இலவசம் என்பது எவ்வளவு மானங்கெட்ட செயல் என்பது புரியுதா? செல்போனுக்கு புது மாடல் வேண்டும். ஆனால் 60 ஆண்டுகளாக அதே கட்சிகள் மட்டும் ஏன் தேர்வு செய்ய வேண்டும்? மலேசியா, சிங்கப்பூரில் மருத்துவம், கல்வி எப்படி உள்ளது? நம் நாட்டில் எப்படி உள்ளது என பாருங்கள். மலை மற்றும் மணல் வளங்களை கொள்ளை அடிக்கின்றனர். மீண்டும் அவற்றை மீட்டெடுக்க முடியுமா?” என்றார்.

