“போடா டேய்... அங்க போய் கடையில டீ வித்துக்க”- பரப்புரையில் TVK எனக் கூச்சலிட்ட இளைஞர்களால் சீமான் ஆவேசம்

 
s

புதுச்சேரியில் சீமான் தேர்தல் பிரச்சாரத்தில் வேனில் சீமான் பேசும் போது, அவ்வழியே வந்த தவெகவினர் TVK, TVK என கோஷம் எழுப்பியதால், அவர்களை நாதகவினர் தாக்க முயற்சித்தனர். 


புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 5 மணியுடன் நிறைவுறும் நிலையில் தலைவர்கள் புதுச்சேரியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வேட்பாளர் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். புதுச்சேரியின்  மேட்டுப்பாளையம் பகுதியில்  சீமான் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது தவெகவினர் டிவிகே, டிவிகே என கோஷமிட்டனர்.

அதற்கு.. இங்கு வந்து ஏன் டீ விற்கிறாய்..? டே.. அங்க போய் கடையில போய் டீ வித்துக்க.. போடா டேய்.. இங்க வாடா இங்க வந்து டீ வித்துட்டு போ.. என மைக்கில் கத்தினார் சீமான். இதனால் ஆவேசமான நாம் தமிழர் கட்சியினர் தவெகவினரை பிடித்து இழுக்கச் சென்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு பணியில் இருந்த 
போலீசார் சமாதானம் செய்து இரு தரப்பினரையும் கலைந்து செல்ல செய்தனர். அவனுக்கும் சேர்த்து தான் நான் கத்திக்கொண்டு இருக்கிறேன் என சீமான் கூறி தனது பிரச்சாரத்தை தொடர்ந்தார்.‌ இதனால்  சீமான் பிரச்சாரத்தில் 10 நிமிடங்கள் பரபரப்பு காணப்பட்டது.