ஸ்டாலின் வெல்லட்டும் நாடு சுடுகாடாகட்டும்- சீமான்

 
seeman

ஸ்டாலின் வெல்லட்டும் நாடு சுடுகாடாகட்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாபமிட்டார்.

காரைக்குடியில் பரப்புரையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “இதே இந்த மண்ணில் இருக்கிற பெருமகனார் ஐயா சிதம்பரத்துக்கு `கை' சின்னத்தில் வாக்குகேட்டு, `உதயசூரியன்' போட்ட வீட்டு வாசலில் போய், `கை’ சின்னத்தை எழுதிட்டேன்னு பஞ்சாயத்தில் நிறுத்தப்பட்டவன் நான். `கை' சின்னத்தை படிக்கிற காலத்திலேயே வரைந்து அவருக்கு வாக்குகேட்டவன், இன்று `கை' சின்னத்தையே ஒழிக்க வேண்டும் என்று நிற்கிறேன். ஸ்டாலின் வெல்லட்டும் நாடு சுடுகாடாகட்டும்” என்றார்.

முன்னதாக காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமான், மைதானத்திற்கு சென்று காரைக்குடி அழகப்பர் நடையாளர் சங்க உறுப்பினர்களிடையே வாக்கு கேட்டார்.