என்னை துணை முதலமைச்சர் ஆக்குவதாக ஆதவ் அர்ஜுனா சொன்னார்: சீமான்
எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்தால் என்னை துணை முதலமைச்சர் ஆக்குவதாகச் சொன்னார் ஆதவ் அர்ஜுனா என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தாராபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய சீமான், “சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி ஐயாவுடன் கூட்டணி வைத்தால் துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜுனா என்னிடம் பேசினார். அதற்கு சம்மதிக்கவில்லை என்றதும், வேளாண் துறை அமைச்சர் பதவி தருவாகப் பேசினார். எங்களுக்கு உடன்பாடு இல்லை என வெளிப்படையாக தெரிவித்துவிட்டோம். சினிமாவில் பஞ்ச் டயலாக் பேசி சண்டை போட்டதை சட்டசபையில் பண்ணிட்டு இருக்காரு. ஆட்டுக்கு இருக்கும் மூளை கூட தமிழக வெற்றிக் கழகத்தில் இருப்பவர்களுக்கு கிடையாது. குறிப்புகளை வைத்து கொண்டு பேசுபவர்கள் தலைவர்கள் கிடையாது. குறிக்கோளுடன் பேசுபவர்கள்தான் தலைவர்கள். நானும் தம்பியும் வாகனத்தில் பயணித்த போது, அவர் தான் வாகனம் ஓட்டினார். காங்கிரஸை கூட சேர்த்துக் கொள்ளலாமா என்று என்னிடம் கேட்டார். யார் இந்த யோசனையை கூறியது என்று கேட்டேன். காங்கிரசை கையில் வைத்துக் கொண்டு என்ன பேச முடியும்? என்றேன். ஊழல், லஞ்சத்தை எப்படி ஒழிப்பது என்று என்னிடம் கேட்டார். அவருக்கு அந்த நோக்கம் இருக்கிறது, கட்சியினருக்கு இல்லை. அதனால் தான் தவெகவினரை ஒழிக்க முடிவு செய்தோம்” என்றார்.

