திமுக நிர்வாகியை தாக்கியதாக சீமான் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

 
ச் ச்

திமுக நிர்வாகியை தாக்கியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் காரை வழிமறித்த திமுக நிர்வாகி ரங்கனை தாக்கி சீமான் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக திமுக பிரமுகர் அளித்த புகாரின் பேரில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பொது இடத்தில் ஆபாசமாக பேசுவது, கூட்டமாக வந்து தாக்குவது உள்ளிட்ட 4 பிரிவுகளின் போலீஸார் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மேலும் 14 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருத்தாசலத்தில் சீமான் பயணித்த காரை வழிமறித்த, ‘சீமான் ஒழிக’ என திமுக பிரமுகர் ரங்கநாதன் கோஷமிட்டதாக தெரிகிறது. நாம் தமிழர் கட்சியினர் அளித்த புகாரில் திமுக பிரமுகர் ரங்கநாதன் மீதும் இரு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.