சொத்து ஏதும் இல்லைப்பா... சீமானின் வேட்புமனுவில் அதிர்ச்சி தகவல்

 
ச்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனக்கு அசையா சொத்தாக ஏதும் இல்லை என வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Image

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று காலை தொடங்கி வரும் ஏப்ரல் 6-ம்தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருந்தார். அதன்படி, சீமானும் இன்று காலை காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் சீமான், தனக்கு அசையும் சொத்தாக ரூ.39 லட்சத்து, 81 ஆயிரத்து 500 இருப்பதாகவும், அசையா சொத்தாக ஏதும் இல்லை எனவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் சீமான் மனைவி கயல்விழி காளிமுத்து பெயரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 25 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது, கடந்த முறை சீமான் தாக்கல் செய்த வேட்புமனுவில் கயல்விழி பெயரில் கொடைகானலில் உள்ள சொத்துகள் மட்டும் குறிப்பிடப்பட்டது, இந்த புதிய சொத்து இன்று சீமான் தாக்கல் செய்த வேட்புமனு படிவத்தில் கண்டிப்பாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இடம்பெறவில்லை.