ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜர்!!

 
tn

ஈரோடு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகினார். 

seeman

கடந்த பிப்ரவ்ரி 13 ஆம் தேதி  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான மேனகாவை ஆதரித்து சீமான் பரப்புரை மேற்கொண்டார்.  அப்போது பிரச்சாரத்தின் போது, அருந்ததியினர் சமூகம் குறித்து  பேசியிருந்தார். இதுக்குறித்து கருங்கல்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் 22 ஆம் தேதி எஸ்சி மற்றும் எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

seeman

இந்நிலையில் பட்டியலின சமுதாயத்தினர் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராக சம்மன் வழங்கிய நிலையில் ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜரானார். ஈரோடு கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.