சீமான் அதிரடி..! சாட்டை யூடியூப் சேனலுக்கும் நா.த.க-வுக்கும் தொடர்பில்லை..!

 
1
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்சி திரு.துரைமுருகன் அவர்கள் நடத்தும் 'சாட்டை' வளையொளிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அதில் வருகிற கருத்துகள், செய்திகள் அனைத்தும் அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். அவற்றுக்கு நாம் தமிழர் கட்சி எந்த வகையிலும் பொறுப்பாகாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கையை சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

சீமானின் இந்த திடீர் அறிக்கைக்கு  காரணம், தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சாட்டை துரைமுருகன் வெளியிட்ட வீடியோவில் நயினார் நாகேந்திரன், இஸ்லாமியருக்கு எதிரான சங்கி எல்லாம் இல்லை என்பது உள்ளிட்ட கருத்துகளை கூறியிருந்தார். ஏற்கனவே நாம் தமிழர் கட்சி, பா.ஜ.க-வின் பி டீம் என விமர்சிக்கப்படும் நிலையில் தற்போது பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை, சாட்டை துரைமுருகன் வரவேற்று பேசுவது கட்சிக்குள் குழப்பத்தை தூண்டி இருப்பதாக கூறப்படுகிறது. 

தவிர, பல்வேறு பலாத்கார வழக்குகளில் தேடப்படுகிற பாலியல் குற்றவாளியான நித்தியானந்தாவிடம் சாட்டை துரைமுருகன் பேட்டி எடுத்து ஒளிபரப்ப இருந்தது மற்றொரு காரணமாக சொல்லப்படுகிறது.