‘பாஜகவுடன் ரகசிய உறவா? எடப்பாடிக்கு அரசியல், நாட்டு நடப்பு தெரியல..’ - அருகதையே இல்லை என முதல்வர் ஸ்டாலின் காட்டம்..
“ஜெயலலிதாவுக்கு ஒரு இரங்கல் கூட்டம் கூட நடத்தாதவர்களுக்கு, கலைஞர் நூற்றாண்டு விழா குறித்து பேச அருகதை இல்லை” என எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது விழா மேடையில் சிறப்புரை ஆற்றிய அவர், “கலைஞர் நூற்றாண்டு விழா நடந்தது போன்று வேறு எந்த விழாவும் இந்தியாவில் நடந்ததில்லை. தமிழ்நாட்டில் 1.15 கோடி மகள் இருக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படுகிறது. கலைஞர் நினைவிடத்தை போல வேறு எங்கும் பார்த்ததும் இல்லை என்று அமைச்சர் ராஜ்குமார் சிங் கூறினார். அமைச்சர் ராஜ்நாத் சிங் திமுக காரர்களை விட கலைஞரை மிகவும் புகழ்ந்து பேசினார். அப்படிப் பேச வேண்டும் என அவருக்கு எந்த அவசியமும் இல்லை; ஆனால் உள்ளத்தில் இருந்து உண்மையை பேசி இருக்கிறார். ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதை சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
கலைஞர் நாணயத்தில் இந்தியில் எழுத்துக்கள் எழுதப்பட்டிருப்பதாக டப்பாடி பழனிசாமி விமர்சித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு நாட்டு நடப்பு தெரிந்திருக்க வேண்டும் அல்லது அரசியலாவது தெரிந்திருக்க வேண்டும். ஏற்கனவே எம்.ஜி.ஆருக்கும் அண்ணாவுக்கும் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. அதை எடப்பாடி பழனிசாமி பார்த்திருக்க மாட்டார். அண்ணாவுக்கு நாணயம் வெளியிட்ட போது அவருடைய தமிழ் கையெழுத்து இடம்பெறச் செய்தார் கலைஞர். கலைஞர் வழியில் அவருக்கு நாணயம் வெளியிட்ட போது அவருக்கு பிடித்த வார்த்தையான ‘தமிழ் வெல்லும்’ என்கிற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ் வெல்லும் என்கிற வார்த்தை இடம் பெற்றிருப்பதை பார்க்க கூட மனம் இல்லாத பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக வைத்திருக்கிறார். கலைஞர் நாணய வெளியீட்டு விழாவுக்கு ராகுலை ஏன் அழைக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். கலைஞர் நாணய வெளியீட்டு விழாவை நடத்தியது ஒன்றிய அரசு திமுக அல்ல. ஒன்றிய அரசு நாணயத்தை வெளியிட்டதால்தான் ஒன்றிய அமைச்சரை அழைத்து விழா நடத்தப்பட்டது.
எம்ஜிஆர் நாணய வெளியீட்டு விழாவுக்கு எடப்பாடி பழனிசாமி விடுத்த அழைப்பை ஒன்றிய அரசு ஏற்கவில்லை. ஒன்றிய அமைச்சர்கள் வர மறுத்துவிட்ட காரணத்தால் தான் எடப்பாடி பழனிசாமியை எம்ஜிஆர் நாணயத்தை வெளியிட்டார். ஜெயலலிதா மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும், ஒரு இரங்கல் கூட்டத்தையாவது அதிமுகவினர் நடத்தி உள்ளார்களா ? ஜெயலலிதாவுக்கு ஒரு இரங்கல் கூட்டம் கூட நடத்த முடியாதவர்கள், கலைஞர் நூற்றாண்டு விழா பற்றி பேச தகுதியற்றவர்கள். ராம்நாத் சிங்கை அழைத்து விழா நடத்தியதால் பாஜகவுடன் திமுக ரகசிய உறவு வைத்துள்ளதாக பழனிச்சாமி கூறி இருக்கிறார். பாஜகவுடன் எந்த ரகசிய உறவும் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. திமுக எதிர்த்தாலும் ஆதரித்தாலும் அந்த நிலைப்பாட்டில் வெளிப்படையாகவும் உறுதியுடனும் இருக்கும். தமிழ்நாட்டு உரிமைகளை எக்காரணத்தை கொண்டும் திமுக விட்டுக் கொடுக்காது" என்று கூறினார்