போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் அறிவிப்பு
சம ஊதியம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் உடன் சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

‘சம வேலைக்குச் சம ஊதியம்’ வழங்க வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி வளாகத்தை முற்றுகையிட முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டன. தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு சமநிலைக்குச் சம ஊதியம் வழங்கப்படும் என 311ஆவது வாக்குறுதியில் உறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்த பின்பும் அதனை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதே இடைநிலை ஆசிரியர்களைத் தொடர் போராட்டம் நடத்தும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளாக மனு கொடுக்கும் போராட்டம், உள்ளிருப்பு போராட்டம், முற்றுகை போராட்டம் நடத்தபட்ட நிலையில், அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
இந்நிலையில் சம ஊதியம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் உடன் சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனையடுத்து போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.


