1,768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு!

 
teachers

2023-2024-ம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் பிப்.14 முதல் மார்ச் 15 வரை http://trb.tn.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-2024-ம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியர் 1768 பணியிடங்களுக்கான அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இடைநிலை ஆசிரியர் 2023-2024 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் (Website: http://www.trb.tn.gov.in) வாயிலாக இன்று (09.02.2024) வெளியிடப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்க ஏதுவாக 14.02.2024 முதல் 15.03.2024 பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.