ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் இருக்கைகள் காலியாக இருந்தன- நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்

 
ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் இருக்கைகள் காலியாக இருந்தன- நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விளக்கம்

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் காலியாக இருந்த இருக்கைகளுக்கான புகைப்படம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் வெளியிடப்பட்டுள்ளது.


ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி விவகாரம் தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில், நிகழ்ச்சியை நடத்திய ஏசிடிசி நிறுவனத்தின் இயக்குநர் ஹேமந்த் ஆஜரானார். அவரிடம் சுமார் 30 நிமிடங்கள் போலீசார் விசாரணை நடத்தினர். அவருடன் ஏசிடிசி நிறுவன பிரதிநிதி செந்தில் வேலன் விசாரணைக்கு ஆஜரானார்.

AR Rahman: `இனி மறக்குமா நெஞ்சம்?!' - களேபரமான கான்சர்ட்; சிக்கிய முதல்வர் வாகனம்; போலீஸ் விசாரணை!

விசாரணைக்கு பின்னர் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி குறித்து விளக்கம் அளித்த ஏசிடிசி நிறுவனத்தின் இயக்குநர் ஹேமந்த் , “ரசிகர்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் ஏற்பட்ட குழப்பம் தான் அத்தனைக்கும் காரணம். ஒவ்வொரு பிரிவாக பிரித்து வைத்திருந்த நிலையில் ஒரே இடத்தில் அத்தனை பேரும் குவிந்தனர். 36 ஆயிரம் டிக்கெட்டுகள் தான் நாங்கள் விற்றோம். 5 ஆயிரம் டிக்கெட்டுகள் இலவசமாக தரப்பட்டது. இசை நிகழ்ச்சி நடந்த மைதானத்தில் போதுமான இடமும் இருக்கைகளும் இருந்தன. ரசிகர்கள் அனைவரும் ஒரே பகுதியிலேயே அமர்ந்ததால், மற்றொரு பகுதியில் இருக்கைகள் காலியாக இருந்தன” என விளக்கம் அளித்துள்ளார்.