தொகுதி பங்கீடு தொடர்பாக விசிக-திமுக இடையே பேச்சுவார்த்தை

 
tn

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியியுடன், திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.  

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வருகிறது . இந்த சூழலில் திமுக கூட்டணியில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முன்னதாக நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 சிறப்புக் குழு அமைத்தது திமுக.  தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும்,  தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் 3 குழுக்களை அமைத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்  உத்தரவிட்டார். 

arivalayam


இந்நிலையில் திமுக - விசிக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக விசிக உடன் திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது ஒரு பொது தொகுதி உட்பட 3 தொகுதிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டதாக கூறப்படுகிறது. இதேபோல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடனும் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.