யூடியூபர் மீனாட்சி வீட்டில் சோதனை

 
s

மதுரை நகைக்கடை கொள்ளை தொடர்பாக யூடியூபர் மீனாட்சி தாயாரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். கைதான யூடியூபர் மீனாட்சி வீட்டில் சோதனை நடைபெற்றுவருகிறது. 

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை தொடர்பாக இன்ஸ்டா பிரபலம் நிஷாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இன்ஸ்டா இன்ஃப்ளுயன்சர் மீனாட்சி நாச்சியாரின் திருப்பாலை வீட்டில் தனிப்படை போலீஸார் இன்று சோதனை நடத்தினர். மீனாட்சியின் தாயாரும் இன்ஸ்டா பிரபலமுமான சிந்துவிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இதனிடையே இந்த வழக்கில் கைதான நிஷாந்தை போலீசார் பலத்த பாதுகாப்புடன் மதுரைக்கு அழைத்து வந்தனர்.  நிஷாந்த் சொன்ன தகவலின் அடிப்படையில் நகைகளை மீட்க மீனாட்சி வீட்டில் சோதனை நடைபெற்றுவருவதாக தெரிகிறது.  

மதுரையில் உள்ள தனிஷ்க் (Tanishq) நகைக்கடையில் இந்தக் கொள்ளைச் சம்பவம் 2026 நவம்பர் 11-ஆம் தேதி நள்ளிரவு (நவம்பர் 12 அதிகாலை) நடைபெற்றுள்ளது. கடை பூட்டப்பட்ட பிறகு, நவம்பர் 12-ஆம் தேதி அதிகாலை சுமார் 3 மணி அளவில் இந்தக் கொள்ளை அரங்கேறியுள்ளது. மறுநாள் (நவம்பர் 12) காலை ஊழியர்கள் கடையைத் திறந்தபோதுதான் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இந்த குற்றத்தை நிஷாந்த்  என்ற குற்றவாளி செய்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய மீனாட்சி ஒரு இன்ஸ்டாகிராம் பிரபலமாகவும், டெக் பாஸ் (Tech Boss) என்ற யூடியூப் சேனலில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்தவர்.  நிஷாந்த், அவரது தந்தை சுரேஷ், இன்ஸ்டா இன்புளூயன்சர் மீனாட்சி கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 5 கிலோவுக்கு மேலான தங்க நகைகள் மீட்கப்பட்டன.