வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜூனாவின் அலுவலகத்திற்கு சீல்?
வில்லிவாக்கத்தில் தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் தேர்தல் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா, “இப்போது இருக்கும் பிரச்சனை என்னவென்றால், திமுகவினர் இன்னும் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறார்கள். இன்னும் தங்களை மினிஸ்டர்களாகவே நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இன்று NOTIFICATION வெளியாகிவிட்டது. குறிப்பாக, எந்த வேட்பாளரையும் தவிர்க்காமல், பக்கத்தில் இருந்து யாரை தொகுதி பொறுப்பாளராக நியமித்திருக்கிறோமோ, அல்லது மாவட்ட செயலாளர் தேர்தல் பணிமனை அமைக்க வேண்டுமென்றால், அவர்களுடைய அலுவலகத்தை உடனடியாக STOP செய்கிறார்கள். மிரட்டுகிறார்கள். அந்தந்த ELECTION ஆபீசரிடம் நாங்கள் COMPLAINT கொடுத்திருக்கிறோம். குறிப்பாக இன்று வில்லிவாக்கத்தில் என்னுடைய அலுவலகத்திற்கு HR & CE மினிஸ்ட்ரியில் இருந்து நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள். அது கோயில் இடம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அந்த மண்டபம் 45 வருஷமாக அங்கேயே இருந்து வருகிறது. நாங்கள் அந்த ஓனருடன் அக்ரீமெண்ட் போட்டிருக்கிறோம். ஆனால் சேகர் பாபு இன்னும் மினிஸ்டராக நினைத்துக்கொண்டு இருக்கிறார். நோட்டிபிகேஷன் வெளியான நாளிலிருந்து அவருக்கு மினிஸ்டரியின் அதிகாரம் இல்லை.
HR & CE மினிஸ்ட்ரிக்கு அப்படி நோட்டீஸ் கொடுக்கும் அதிகாரமும் இல்லை. ஆனால் காவல்துறை உடனடியாக அந்த HR & CE மினிஸ்டர் எடுத்து, இன்று மாலை 6 மணிக்கு சீல் வைப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். இதற்கு எந்த அதிகாரமும் இல்லை. அந்த மண்டபத்தில் பிரச்சனை இருந்தால், கோர்ட்டில் இருந்து ஆர்டர் வந்தால்தான் பொசிஷன் எடுக்க முடியும்.இதுதான் விதி. ஆனால் இப்போது காவல்துறையும், முன்னாள் மினிஸ்டர்கள் உட்பட திமுகவினர் இன்னும் மினிஸ்டர்களாக நினைத்து, தேர்தல் அலுவலகங்களை ஸ்டாப் செய்கிறார்கள். முக்கியமாக தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அலுவலகங்களை ஸ்டாப் செய்கிறார்கள். இதை தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவோம். மீண்டும் ஒரு முறை நாளைக்கு நாங்கள் APPLY செய்யப் போகிறோம். அதே DGP இருக்கிறார், அதே இன்டெலிஜென்ஸ் ஆபீசர் இருக்கிறார், அதே SP-கள் இருக்கிறார்கள். தேர்தல் நடைமுறைக்கு வந்தவுடன் SP-களை கண்டிப்பாக மாற்ற வேண்டும்.இன்னும் திமுகவின் மனநிலையிலேயே, முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர் என இருக்கக்கூடிய மு.க.ஸ்டாலின் அவர்களின் பேச்சையும், அமைச்சர்களின் பேச்சையுமே கேட்டுக்கொண்டு இருக்கும் துர்பாக்கிய நிலையில்தான் இப்போதும் காவல்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள்.நாளைக்கு நாங்கள் தேர்தல் கமிஷனின் அதிகாரத்திடம் முறையிடுவோம். கண்டிப்பாக காவல்துறையை மொத்தமாக மாற்ற வேண்டும்.
இன்டெலிஜென்ஸ் மாற்றப்பட வேண்டும். கமிஷனர்கள் மாற்றப்பட வேண்டும். அங்கங்கு இருக்கும் SP-களும், DEPUTY கமிஷனர்களும் மாற்றப்பட வேண்டும். தேர்தல் கமிஷனின் அனுமதி இல்லாமல் காவல்துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். அப்படி அவர்கள் நடவடிக்கை எடுத்தால், நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்.என்னுடைய தொகுதியிலேயே இன்று கடுமையான மன அழுத்தம் கொடுத்து, வில்லிவாக்கத்தில் சேகர் பாபுவின் ஆட்கள் HR & CE மினிஸ்டர் என்ற போர்வையில் நெருக்கடி கொடுத்து, அலுவலகத்தை சீல் வைக்க வேண்டும் என்று வந்திருக்கிறார்கள். இது ஜனநாயகத்துக்கு எதிரானது. இதை நான் பதிவு செய்கிறேன்” என்றார்.

