கள்ளச்சாராய பலி எதிரொலி- செங்கல்பட்டில் 50 மதுபான பார்களுக்கு சீல்

 
பார்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ள சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்ததை அடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள 50 பார்களுக்கு சீல் வைக்க புதிய காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். 

டாஸ்மாக் பார் மூடப்பட்டால் மக்களுக்கு நன்மை உண்டா?! - ஒரு சமூகப் பார்வை |  Do people benefit from the lock of Tasmac Bar? - Vikatan

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ள சாராயம் குடித்து 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினர்க்கு தலா பத்து லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் காசோலை மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்  முன்னிலையில் சிறு குறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் வந்து காசோலையை வழக்கினார். 

செங்கல்பட்டு மாவட்ட காவல் உட்கோட்ட பகுதியில் மொத்தம் 50 மதுபான பார்கள் உள்ளது. இந்த அனைத்து பார்களையும் மூட செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிவுறுத்தலின் படி, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய் பிரணீத் உத்தரவின் படி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மதுபான பார்களை மூட காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர் . முதல் கட்டமாக மேல்மருவத்தூர் மற்றும் சட்ராஸ் ஆகிய இரண்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இரண்டு மதுபான பார்களுக்கு காவல்துறையினர் மூடி சீல் வைத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக மீதமுள்ள 48 பார்கள் மூடபட்டுள்ளது. அந்த பார்களுக்கு நாளை காவல்துறையினர் சீல் வைக்க திட்டமிட்டுள்ளனர். இந்த சீல் வைப்பு சம்பவம் வெறும் கண் துடைப்பாக மட்டும் இல்லாமல் நிரந்தரமாக மதுபான பார்கள் மூடப்பட வேண்டும் என்பதே செங்கல்பட்டு மாவட்ட ஒட்டுமொத்த  மக்களின் கோரிக்கையாக உள்ளது.